தோனி கையெழுத்துடன் லிமிடேட் எடிசன் ஸ்டார் சிட்டி அறிமுகம்

இந்த மோட்டார்சைக்கிள்களில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனியின் கையெழுத்து பொறிக்கப்பட்டிருக்கும். தவிர, நம்பவே முடியாத அளவுக்கு 5 வாரண்டியுடன் இந்த பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
மேலும், இந்த மோட்டார்சைக்கிள்களை பிரபலப்படுத்தும் விதமாக புதிய டிவி விளம்பரம் ஒன்றை டிவிஎஸ் மோட்டார்ஸ் தயாரித்துள்ளது.
இந்த விளம்பரத்தில் தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், இந்த விளம்பரத்தை அமெரிக்க வாழ் இந்திய சினிமா தயாரிப்பாளர்களான ராஜ் நிதிமொரு மற்றும் கிருஷ்ணா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
இதுகுறி்தது தோனியின் ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைவர் அருண் பாண்டே கூறுகையில்,"நாட்டிற்காக கிரிக்கெட் ஆட துவங்கியது முதல் டிவிஎஸ் நிறுவனத்துடன் தோனி மிக நெருங்கிய பிணைப்பை கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த விளம்பரத்தில் தனது மனைவியையும் நடிக்க வைத்துள்ளார்," என்றார்.


Click it and Unblock the Notifications