இந்த ஆண்டில் 2,000 ஹயோசங் சூப்பர் பைக்குகளை விற்க கார்வேர் இலக்கு

புனேயை சேர்ந்த கார்வேர் நிறுவனம் தென்கொரியாவை சேர்ந்த எஸ்.டி., நிறுவனத்துடன் இணைந்து கடந்த வாரம் ஹயோசங் பிராண்டில் இரண்டு சூப்பர் பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
650 சிசி திறன் கொண்ட ஜிடி650ஆர் என்ற சூப்பர் பைக் ரூ.4.97 லட்சம் விலையிலும், 700சிசி திறன் கொண்ட எஸ்டி7 என்ற குரூஸர் பைக் ரூ.5.96 லட்சம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த ஆண்டில் 2,000 ஹயோசங் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கார்வேர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் தியா கார்வேர் கூறியதாவது:
"650சிசி முதல் 700 சிசி ரகத்தில் முதன்முதலாக இந்தியாவில் சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளோம்.
எங்கள் நிறுவனத்துக்கு தற்போது 5 டீலர்கள் உள்ளனர். அடுத்த மூன்று மாதத்தில் டீலர்களின் எண்ணி்க்கையை 15 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இன்னும் இரண்டு மாதத்தில் சென்னை, ஐதராபாத், கொச்சி, ஆமதாபாத் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் புதிய டீலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த ஆண்டில் 2,000 ஹயோசங் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். புனேயில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு சிங்கிள் ஷிப்டில் 9 பைக்குகள் வரை உற்பத்தி செய்யலாம்,"என்றார்.


Click it and Unblock the Notifications








