டிவிஎஸ் ஸ்டார் சிட்டி மோட்டார்சைக்கிள்- சிறப்பு பார்வை

கிராமப்புற சந்தைக்கேற்ற வண்டியென்றாலும் எலக்ட்ரிக் ஸ்டார்ட், காஸ்ட் வீல் என அனைத்து அம்சங்களிலும் குறைவில்லாமல் வருகிறது. 'ரப் யூஸ்' என்று கூறப்படும் கரடு முரடான கையாளுமையில் கூட அதிக உழைப்பை கொடுக்கும் உறுதியான கட்டமைப்பை கொண்டுள்ளது. இதன்மூலம், டிவிஎஸ் பெயரை மேல்கொண்டு சென்ற மாடல்களில் ஸ்டார் சிட்டிக்கு முக்கிய பங்கு உண்டு.
இதனாலேயே, கிராமப்புற மக்களால் பெரிதும் விரும்பப்படும் இருசக்கர வாகனமாக ஸ்டார் சிட்டி திகழ்கிறது. ஸ்டார் சிட்டியின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.
எஞ்சின்:
100 சிசி செக்மெண்டில் இருந்தாலும் ஸ்டார் சிட்டி 109.7 சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் வருகிறது. இந்த எஞ்சின் 5,000 ஆர்பிஎம்மில் அதிகபட்சம் 6.1 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். புதிய தொழில்நுட்பத்தில் குறைந்த உராய்வை கொண்ட இதன் எஞ்சின் நீடித்த ஆயுளை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
வடிவவைப்பு:
100 சிசி செக்மெண்டில் உள்ள அனைத்து மோட்டார்சைக்கிளிலும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் விதமாக புத்தம் புதிய கிராபிக்ஸ் டிசைனர்களுடன் வருகிறது. பக்கவாட்டில் இருந்து பார்த்தால் சிறுத்தை முகம் போன்ற இதன் ஹெட்லைட் ஸ்கூப்பும் சீறும் தோற்றத்தை கொடுக்கிறது. அலாய் வீலும் ஸ்டார் சிட்டியை ஜொலிக்க வைக்கிறது.
சொகுசு மற்றும் கையாளுமை:
இரண்டு பேர் தாராளமாக அமர்ந்து செல்லும் இருக்கை வசதி நீண்ட தூர பயணம் செய்தாலும் சோர்வு தட்டவில்லை.எலக்ட்ரிக் ஸ்டார்ட், மொபைல் சார்ஜர், பிரகாசமான ஹெட்லைட்டுகள் ஆகியவை ஸ்டார் சிட்டியின் மதிப்பை கூட்டுகிறது. எடைக்கு தக்கவாறு அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் கூடிய டெலிஸ்கோப்பிக் ரியர் ஷாக் ப்சார்பர்கள் ஸ்டார் சிட்டி பயணத்தை சொகுசாக்குகிறது. ஹேண்டில்பார்களும் கைகளுக்கு சரியான சப்போர்டை கொடுக்கிறது. மேலும், 9.4 நொடிகளில் மணிக்கு 60கிமீ வேகத்தை எட்டிவிடுகிறது.
வீல் பேஸ்:1240 மிமீ
வண்டியின் எடை:104 கிலோ
வண்ணங்கள்: பர்ப்புள், மிட்நைட் பிளாக் மற்றும் ப்ளேமிங் ரெட்
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 2.5 லிட்டர் ரிசர்வுடன் 16 லிட்டர்
மைலேஜ்: லிட்டருக்கு சராசரியாக 60 கிமீ(டிரைவிங்கின் நிலைகளை பொறுத்து மாறுபடும்)
விலை: ரூ.49,640 (சென்னையில் தோராய ஆன்ரோடு விலை)


Click it and Unblock the Notifications








