இறக்குமதி வரி அதிகரித்தாலும் பைக் விலையை உயர்த்த மாட்டோம்: ஹார்லி டேவிட்சன்

Harley Davidson
டெல்லி: இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தினாலும், பைக்குகளின் விலையை உயர்த்தப் போவதில்லை என ஹார்லி டேவிட்சன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கார்கள் மற்றும் பைக்குகளுக்கான முக்கிய பாகங்களை இறக்குமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு 30 சதவீதம் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பல வெளிநாட்டு கார் மற்றும் பைக் நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

வாகன தயாரிப்புக்கான முக்கிய பாகங்களை இறக்குமதி செய்வதற்கு முன்பு 30 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், வெளிநாட்டு நிறுவனங்கள் இனிமேல் 60 சதவீத வரியை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு வெளிநாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கார் மற்றும் பைக் விலையை உயர்த்துவது குறித்து பல நிறுவனங்கள் பரசீலித்து வருகின்றன. இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம், பைக்குகளின் விலையை உயர்த்தப்போவதில்லை என்று அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறுகையில்," மத்திய அரசு இறக்குமதி வரியை அதிகரித்தாலும், வாடிக்கையாளர் நலன்கருதி பைக்குகளின் விலையை உயர்த்தப்போவதில்லை. ஆனால், வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை கூர்ந்து கவனிப்போம். இந்தியாவில் நீண்ட கால வர்த்தகத்தில் ஈடுபட விரும்புகிறோம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 27, 2011, 12:40 [IST]
English summary
Despite the furore over the levy on imported components coming under the definition of CKD, the US bike maker Harley-Davidson is firm not to hike the prices of its bikes in India
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+