மேம்படுத்தப்பட்ட புதிய சிபிஆர்1000ஆர்ஆர்: ஹோண்டா அறிமுகம்

Honda CBR 1000RR
சிபிஆர்1000 சூப்பர் பைக் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக புதிய சிபிஆர் சூப்பர் பைக் மாடலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இருசக்கர வாகன தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கிறது. சாதாரண ரக பைக்குகளை தவிர சூப்பர் பைக் தயாரிப்பிலும் ஹோண்டா புகழ்பெற்று விளங்குகிறது.

இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் சூப்பர் பைக் மாடல்களில் ஒன்றான 1000சிசி திறன் கொண்ட சிபிஆர்1000 பைக் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைக்கொண்டாடும் விதமாக சிபிஆர்1000ஆர்ஆர் பயர்பிளேடு 2012 என்ற பெயரில் இந்த மேம்படுத்தப்பட்ட சிபிஆர்1000 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

வெளிப்புற வடிவைப்பில் புதிய சிபிஆர்1000 பல மாற்றங்களை கண்டுள்ளது. புதிய அலாய் வீல், நவீன தொழில்நுட்பம் கொண்ட புதிய சஸ்பென்ஷன் மற்றும் புதிய கிராபிக்ஸ் ஸ்டிக்கர் ஆகியவற்றுடன் இந்த சூப்பர் பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.

பழைய சிபிஆர்1000சூப்பர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 4சிலிண்டர்கள் கொண்ட 999 சிசி எம்பிஎப்ஐ எஞ்சின்தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது.மேலும்,ஹோண்டா ஸ்பீடோமீட்டர் கன்சோல் புதிய எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புதிய சிபிஆர்1000 சூப்பர் பைக்கின் விலை உள்ளிட்ட விபரங்களை ஹோண்டா வெளியிடவில்லை. முந்தைய சிபிஆரைவிட புதிய மாடல் அதிக சீற்றம் கொண்டதாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 28, 2011, 16:56 [IST]
English summary
Honda, the world's leading two wheeler manufacturer has unveiled the new 2012 Honda CBR 1000RR Fireblade superbike. The new model celebrates 20 years of the CBR1000 which was first launched in 1991. The 2012 Fireblade has the same engine specifications as its previous model. Honda has added new stylish exterior designs along with new features such as new alloy wheels, better suspension tuning, better looking instrument cluster and other cosmetic changes.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+