சூரிய ஒளியில் வண்ணம் மாறும் டிஸ்கவர்'மாஜிக்'பைக்:பஜாஜ் அறிமுகம்

By
Bajaj Discover 100
டெல்லி: சூரிய ஒளியில் வண்ணம் மாறும் மல்டி கலர் தொழில்நுட்பம் கொண்ட புதிய டிஸ்கவர் மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டிஸ்கவர் மாடல், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது.எரிபொருள் சிக்கனத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் டிஸ்கவர் மாடல்,விற்பனையில் 40 லட்சம் என்ற புதிய இலக்கை கடந்துள்ளது.

இதை கொண்டாடும் வகையில், மல்டிகலர் தொழில்நுட்பம் கொண்ட டிஸ்கவர்-100 என்ற புதிய மாடலை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது.எரிபொருள் சிக்கனத்தில் புதிய டிஸ்கவர்,தனது வம்சத்தை விஞ்சும் என பஜாஜ் நிறுவனம் சான்று கூறியுள்ளது.

பஜாஜ் ஆட்டோ தலைவர்(மோட்டார்சைக்கிள் பிரிவு)வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ஆட்டோமொபைல் துறையில் முதன்முறையாக மல்டி கலர் தொழில்நுட்பத்தில் டிஸ்கவர்-100 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளோம்.மல்டி கலர் தொழில்நுட்பத்தின் மூலம், சூரிய ஒளியில் பைக்கின் வண்ணம் மாறி மாறி பளபளக்கும்.மெஜந்தா ரெட் மற்றும் கோல்டன் கிரீன் ஆகிய இரண்டு மல்டி கலர் வண்ணங்களில் புதிய டிஸ்கவர் கிடைக்கும்.

தவிர, புதிய டிஸ்கவர் லிட்டருக்கு 80கி.மீ செல்லும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 100சிசி ரகத்தை சேர்ந்த மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது புதிய டிஸ்கவர் அதிக மைலேஜ் தரும் பைக்காக இருக்கும்.இது வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கிறோம்,"என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Monday, February 28, 2011, 12:53 [IST]
English summary
Bajaj Auto Limited (BAL), the leading Indian Two wheeler-maker, launched a new edition of its popular 100 cc bike Bajaj Discover in the Indian market on Thursday. The all new Discover 100 is the 2011 edition of this bike.The company president(motorcycle) said in a statement,on the occasion that bajaj has sold over 40 lakh Discover brand bikes since its introduction in the market in year 2004. To celebrate this success,it is introducing the 2011 edition of the largest selling variant of multi colour technology Discover 100, he added.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+