ஹோண்டா சிபிஆர்250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்

Honda CBR250R
மும்பை: ரூ1.50 லட்சம் விலையில் புதிய சிபிஆர்250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம்.

சிபிஆர்250ஆர் பைக்கில் இரண்டு முக்கிய மாற்றங்களை காணமுடிகிறது. பின்புறத்தில் சாரிகார்டு இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பைக்குக்கு அதிக ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது. இதேபோன்று, மற்றொன்று பைக்கில் பொருத்தப்பட்டுள்ள ஐஆர்சி டயர்கள்.

அதிக ரோடு கிரிப் கொண்ட ஐஆர்சி டயர்களை கான்டினென்டல் நிறுவனத்திடமிருந்து பெற்று பொருத்தி இருக்கிறது ஹோண்டா. பந்தய மோட்டார்சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஐஆர்சி டயர்களை சிபிஆர்250 பைக்கில் பொருத்தி தாய்லாந்திலுள்ள சோதனை ஓட்ட மையத்தில் சோதனை நடத்தியுள்ளது ஹோண்டா.

தவிர, அதிநவீன ஆன்ட்டி பிரேக்கிங் தொழில்நுட்பம் உள்பட பல புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட மாடல்களில் சிபிஆர்250ஆர் பைக் கிடைக்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. சிபிஆர்250ஆர் பைக்கிற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டது.

இதுகுறித்து ஹோண்டா அதிகாரி ஒருவர் கூறுகையில்," பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்காமலேயே இதுவரை 2,000 வாடிக்கையாளர்கள் சிபிஆர்250ஆர் பைக்கை முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த மாதம் முதல் சிபிஆர் பைக்கை டெலிவிரி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். ஆண்டுக்கு 30,000 சிபிஆர்250ஆர் பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, March 28, 2011, 13:47 [IST]
English summary
The Indian market finally gets the much awaited Honda CBR250R, the affordable sports model from the Honda stables.The ex-show room price of this bike is Rs 1.51 lakhs whereas the much talked about version with ABS is available for 20 grand more.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+