புதிய டிஸ்கவர் 125சிசி:பஜாஜ் அறிமுகம்

Bajaj Discover 125 DTSi
டெல்லி: ரூ.45,500 விலையில் டிடிஎஸ்-ஐ தொழில்நுட்பம் கொண்ட புதிய டிஸ்கவர் 125 சிசி மாடலை பஜாஜ் அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்கவர் மார்க்கெட்டை எந்த விதத்திலும் இழந்துவிடக்கூடாது என்பதில் பஜாஜ் மிகமிக கவனமாகவே செயல்பட்டு வருகிறது. எனவே, உற்பத்தி நிறுத்தப்பட்ட டிஸ்கவர் 125 சிசி மாடலை மீண்டும் அறிமுகப்படுத்த பஜாஜ் திட்டமிட்டு இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் கூறியிருந்தோம்.

இந்த நிலையில், டிஸ்கவர் 125 சிசி மாடலை ஒரு வழியாக கடந்த வியாழக்கிழமை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது பஜாஜ். டிடிஎஸ்-ஐ தொழில்நுட்பம் கொண்ட எஞ்சினுடன் புதிய டிஸ்கவர் 125 சிசி மாடல் வந்துள்ளது.

ஹோண்டா ஷைன், சுஸுகி ஸ்லிங்ஷாட், ஹீரோ ஹோண்டா கிளாமர் ஆகிய மாடல்களுக்கு கடும் சந்தை போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைலேஜில் புதிய டிஸ்கவர் கலக்கும் என பஜாஜ் கூறுகிறது.

புதிய டிஸ்கவர் தனது பிற மாடல்களான டிஸ்கவர் 100 மற்றும் டிஸ்கவர் 150 சிசி மாடல்களிலிருந்து எளிதில் வேறுபாடு காணும் வகையில் புதிய ஸ்டிக்கர் வடிவமைப்புடன் வருகிறது.

புதிய டிஸ்கவர் 125 சிசி டிரம் பிரேக் மாடல் ரூ.45,500 விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ. 48,000 விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 3, 2011, 15:19 [IST]
English summary
Bajaj have officially launched the bike with a price tag of Rs. 45,500 for the drum brake version and Rs. 48,000 for the disc brake version.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+