இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலை அமைக்க யமஹா திட்டம்

Yamaha Logo
டெல்லி: உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக யமஹா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யமஹா இந்தியா நிறுவனம், இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் நீண்ட காலமாக முக்கிய இடத்தை தக்கவைத்து வருகிறது. சுரஜ்பூர் மற்றும் பரிதாபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலை அமைத்து யமஹா மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில், உற்பத்தியை அதிகரி்க்கும் வகையிலும், இந்தியாவை முக்கிய ஏற்றுமதி கேந்திரமாக பயன்படுத்தும் விதமாகவும் மூன்றாவது புதிய தொழிற்சாலையை கட்ட திட்டமிட்டு இருப்பதாக யமஹா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யமஹா இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹிரோயூகி சுஸுகி கூறியதாவது:

"இந்தியாவில் வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். சுரஜ்பூரில் உள்ள தொழிற்சாலையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, அடுத்த ஆண்டுக்குள்ள ரூ.300 கோடியை செலவிட இருக்கிறோம்.

தற்போது ஆண்டுக்கு 5 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்து வருகிறோம். லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து மோட்டார்சைக்கிள்களை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளோம்.

மேலும், 2015ம் ஆண்டில் மோட்டார்சைக்கிள் உற்பத்தியை 10 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, இந்தியாவில் மூன்றாவது புதிய தொழிற்சாலையை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த தொழிற்சாலை அமைப்பது குறித்த இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Monday, April 4, 2011, 12:10 [IST]
English summary
Yamaha plans to set up a third plant in India as it looks to expand business here, and also make the country an independent export unit for selling in overseas markets, including Latin America and Africa.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+