அசாருதீன் மகனுக்கு சூப்பர் பைக்கால் வந்த வினை

Ayazuddin Accident Bike
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எம்பி.,யுமான அசாருதீன் மகன் அயாஸுதீன் ஐதராபாத்தில் நேற்று நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 சூப்பர் பைக்கில், அவர் அதிவேகமாக சென்றபோதுதான் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் சூப்பர் பைக்குகள் ஓட்டுவதற்கு ஏற்ற கட்டமைப்புடன் சாலை வசதிகள் இல்லாததால், சூப்பர் பைக் விற்பதற்கான கெடுபிடிகளை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

இககுறித்து பிரபல கார் மற்றும் பைக் ரேஸர் கவுரவ் கில் கூறியதாவது:

"சூப்பர் பைக்குகள் சர்வசாதாரணமாக மணிக்கு 300 கிமீ வேகம் செல்லும் திறன் படைத்தவை. இந்த பைக்குளை ஓட்டுவதற்கு நல்ல பயிற்சி தேவை. முக்கியமாக,எவ்வளவு வேகமாக ஓட்டுகிறோம் என்பதைவிட, சரியாக எந்த நேரத்தில் பைக்கை நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையான கலை சூப்பர் பைக் ஓட்டுபவர்களுக்கு வேண்டும்.

மேலும், இந்தியாவில் சூப்பர் பைக்குகளுக்கு ஏற்ற சாலை வசதிகள் இல்லை. ஆனால், 1,200சிசி திறன் கொண்ட சூப்பர் பைக்கை வெகு எளிதாக இங்கு வாங்கிவிட முடிகிறது. பல இளைஞர்கள் நண்பர்களின் தூண்டுதல்களால் சூப்பர் பைக்குகளை வாங்கி விடுகின்றனர்.

சூப்பர் பைக் ஓட்டுவதற்கு சிறப்பு பயிற்சி பெறுவது மிக அவசியம். ஆனால், நம் நாட்டில் பலர் அதன் பேலன்ஸ் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் ஓட்டுவதுதான் இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது. எனவே, இதுபோன்ற விபத்துக்களை தடுக்க சூப்பர் பைக் விற்பதற்கும், லைசென்ஸ் வழங்குவதிலும் புதிய கெடுபிடிகளை கொண்டு வருவது அவசியம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Monday, September 12, 2011, 12:59 [IST]
English summary
The tragic accident involving Mohammad Azharuddin's son Ayazuddin in Hyderabad has once again highlighted how easy it is to hit the road with a super bike in India. Gaurav Gill, international car rally driver who was recently adjudged the best rally driver in Asia, has been an avid super biker for years now and underlined the dangers of riding such a powerful machine.
 "The thing about super bikes is that they are supposed to go at 300kmph. Absolutely anyone can do that. However, the skill is not in going fast but knowing how to stop in time. And that is where all accidents happen," Gill said."A super bike is a pocket rocket. If you don't know how to stop the bike in time or manoeuvre it, everything ends in the blink of an eye." Gill said the only way one can avoid such incidents is by controlling the licences for such super bikes. "Nowadays anyone can straightaway buy a 1,200-cc bike to show off to his or her friends," he said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+