குளு குளு வசதியுடன் புதிய ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்

Air Conditioned Bike
எடின்பர்க்: இன்றைய காலகட்டத்தில் மோட்டார்சைக்கிள்கள் வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டன.ஆனால், காரில் செல்வது போன்று அதில் சொகுசாக செல்ல முடியாது என்பது பலருக்கு குறையாகவே உள்ளது.

கடும் வெப்பம், மழை, குளிர் போன்ற சீதோஷ்ண நிலைகளில் பைக் ஓட்டும்போது ஏராளமான இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. கடும் கோடை வெயிலில் பைக்கில் செல்லும்போது ஏசி காரில் சென்றால் எப்படி இருக்கும் என்று பலர் ஆதங்கப்படுவதை கண்டிருக்கிறோம்.

அவர்களின் மனக்குறையை போக்கும் வகையில் ஐரோப்பாவை சேர்ந்த பெராவிஸ் மோட்டார்சைக்கிள் நிறுவனம் குளு குளு வசதிகொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

இரண்டு வீல்களுடன் அழகான கேபினுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக் பார்ப்பதற்கு கார் போன்ற தோற்றத்தை கொடுக்கிறது.

அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் பைக், வேகமாக சென்று சாலை வளைவுகளில் திரும்பும்போதும், பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு சிறிய வீல்கள் கேபின் கவிழ்ந்து விடாமல் சப்போர்ட் கொடுக்கிறது. பைக்கை நிறுத்தும்போதும் இந்த வீல்கள் துணைக்கு நிற்கின்றன.

பைக் வேகமெடுக்கும்போது இரண்டு சிறிய வீல்களும் விமான சக்கரங்கள் போன்று கேபினுக்குள் ஒளிந்துகொள்கிறது.ஆட்டோ போன்ற கைப்பிடிகள் கொண்ட ஹேண்டில்பார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேபின் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. இதனால், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அலுப்பில்லாமல் ஓட்டமுடியும்.

இதன் கேபின் இலகு எடையுடன் அதிக உறுதிகொண்ட கார்பன் பைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் சென்னை வெயிலுக்கு ஏற்ற பைக் என்றாலும், விலையை கேட்டவுடன் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிவந்துவிட வேண்டியிருக்கிறது.

ஆம், இதன் விலை இந்திய மதிப்பில் ஜஸ்ட் ரூ.33.3 லட்சம் மட்டுமே.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2011, 9:27 [IST]
English summary
Peraves Monotracer, a Europe based bike manufacturer has developed a motorcycle with a cabin. This sports bike that has been designed for traveling in high speeds also has an air conditioner that keeps you cool in the sweltering heat of summer. However being cool comes at a rather high cost. Peraves Monotracer has priced its air conditioned bike at 52,500 Euros. Its the kind of money with which you can buy a luxury car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+