அப்ரில்லா ஆர்எஸ்வி4 சூப்பர் பைக் முன்பதிவு துவக்கம்; இந்த மாத இறுதியில் டெலிவரி

Aprilia Super Bike
புனே: ஆர்எஸ்வி4 சூப்பர் பைக்குக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாக அப்ரில்லா தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியிலிருந்து டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ கீழ் செயல்பட்டு வரும் அப்ரில்லா நிறுவனம் சூப்பர் பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தனது ஆர்எஸ்வி-4 சூப்பர் பைக்குகளை கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது அப்ரில்லா.

பல்வேறு நாடுகளில் நடந்த பைக் பந்தயங்களில், 45 க்கும் மேற்பட்ட சாம்பியன் பட்டங்களை வெல்வதற்கு காரணமாக இருந்த பெருமையுடன் அப்ரில்லாவின் ஆர்எஸ்வி-4 இந்தியா வந்துள்ளது.

இந்த நிலையில் ஆர்எஸ்வி-4 சூப்பர் பைக்குக்கான முன்பதிவை துவங்கியுள்ளது அப்ரில்லா. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாத இறுதியிலிருந்து ஆர்எஸ்வி-4 பைக் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது.

ஆர்எஸ்வி-4 சூப்பர் பைக்குகள் புனேயிலுள்ள பியாஜியோ நிறுவனத்தின் அலுவலம் வாயிலாக விற்பனை செய்யப்படும் என்று அப்ரில்லா தெரிவித்துள்ளது. ரூ.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் ஆர்எஸ்வி-4 சூப்பர் பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 1, 2011, 16:01 [IST]
English summary
Italian sports bike maker, owned by Piaggio has started taking bookings for the RSV4 Factory – one of most, track oriented, exquisitely crafted and quickest bikes around. The price for the bike is around Rs. 20 lakh ex-showroom. Deliveries will begin by the end of April.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+