எகிப்தில் 150சிசி பாக்ஸர் பைக்கை அறிமுகப்படுத்தியது பஜாஜ்

பாரத் பைக் என்ற பெயரில் 150 சிசி பாக்ஸர் பைக்கை பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் கடந்த இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.
கட்டுறுதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள பாரத் பைக் கிராமப்புற சாலைகளுக்கு ஏற்றதாகவும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிக திறன் கொண்டதாகவும் பஜாஜ் வடிவமைத்துள்ளது.
இந்த நிலையில், பாரத் பைக் தற்போது சர்வதேச பயணத்தை துவங்கியுள்ளது. முதன்முதலாக எகிப்தில் பாரத் பைக்கை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது.
எகிப்தில் உள்ள தட்பவெப்ப சூழ்நிலைக்கு தக்கவாறு பைக்கில் சில மாற்றங்களை செய்து சோதனை ஓட்டங்களை நடத்திய பின்னர் தற்போது அங்கு பாரத் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாரத் பைக்கை அங்கு பிரபலப்படுத்தும் வகையில் எகிப்து முழுவதும் 15 பைக்குகளில் ரோடு ஷோவையும் பஜாஜ் ஆட்டோ துவங்கியுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள் உள்ள இடத்திலிருந்து இந்த ரோடு ஷோ துவங்கப்பட்டு அந்த நாடு முழுவதும் செல்கிறது.
எகிப்தை சேர்ந்த பிரபல ஆட்டோமோட்டிவ் நிறுவனமான கபார் ஆட்டோ பாரத் பைக்கின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








