சாதனை இலக்கை எட்டுவதில் பஜாஜ் ஆட்டோவுக்கு சிக்கல்

நாட்டின் முன்னணி பைக் உற்பத்தி நிறுவனமாக பஜாஜ் திகழ்கிறது.உள்நாட்டு சந்தை தவிர ஏற்றுமதியிலும்,இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்நிலையில், உள்நாட்டு சந்தையில் பஜாஜ் பைக்குளின் விற்பனை சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக,40 லட்சம் பைக்குகளை விற்பனை என்ற சாதனை இலக்கை பஜாஜ் ஆட்டோ எட்டுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ தலைவர் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு சந்தையில் சரிவு ஏற்பட்டு்ள்ளது.40லட்சம் பைக்குகள் விற்பனை என்ற இலக்கை எட்டிப்பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில்,10லட்சம் பைக்குகள் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டது.
இது கடின இலக்கு என்றாலும்,இதுவரை 38.5 லட்சம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில்,12 லட்சம் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக,2 லட்சம் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டதால், உள்நாட்டு சந்தையில் ஏற்பட்ட சரிவு,ஏற்றுமதி மூலம் சரிகட்டப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்,9.28லட்சம் பைக்குகளும், இரண்டாவது காலாண்டில் 10 லட்சமும்,மூன்றாவது காலாண்டில் 9.47 லட்சம் பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டன.
பைக் மற்றும் ஆட்டோ விற்பனையில் 50லட்சம் என்ற புதிய இலக்கை விரைவில் எட்டிப்பிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.மேலும்,வரும் ஏப்ரலில் புதிய டிஸ்கவர் மாடல் அறிமுகப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து,தீபாவளி பண்டிகையின்போது, இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications








