நான்காம் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ லாபம் 165% உயர்வு

கடந்த ஆண்டு நான்காம் காலாண்டில் ரூ.3,442 கோடியாக இருந்த, பஜாஜ் ஆட்டோவின் நிகர வருவாய் கடந்த நான்காம் காலாண்டில் 25 சதவீதம் உயர்ந்து, ரூ.4,300 கோடியாக அதிகரித்துள்ளது.
இதேபோன்று, கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.3,454.8 கோடியை பஜாஜ் ஆட்டோ நிகர லாபமாக ஈட்டியுள்ளது. ஆனால், கடந்த 2009-10ம் நிதியாண்டில் நிகர லாபமாக பஜாஜ் ஆட்டோ ரூ.1,594.6 கோடியை ஈட்டி இருந்தது.
மூலப்பொருட்களின் விலை உயர்வால் பைக் தயாரிப்புக்கான உற்பத்தி செலவீனம் அதிகரித்த போதும், வருவாயில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது பஜாஜ். நிகர லாபம் இரட்டிப்பான கையோடு, மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள தனது பங்குகளுக்கு ரூ.40 டிவின்டென்ட் வழங்கப்படும் என அறிவித்துள்ளது பஜாஜ்.


Click it and Unblock the Notifications








