ஆண்டுக்கு 50 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்க பஜாஜ் இலக்கு

Bajaj KTM
டெல்லி: ஆண்டு்க்கு 50 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை என்ற புதிய இலக்கை எட்டுவதற்கு பஜாஜ் ஆட்டோ வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.

மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும், பஜாஜ் ஆட்டோ நீண்ட பாரம்பரியம் கொண்டுள்ளது. ஸ்கூட்டர் தயாரிப்பில் பயணத்தை துவங்கிய அந்த நிறுவனம் இன்று பிரிமியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது.

இருப்பினும், மார்க்கெட் லீடராக திகழும் ஹீரோ ஹோண்டாவின் விற்பனையை அந்த நிறுவனத்தால், எட்ட முடியவில்லை.

மேலும், கடந்த சில மாதங்களாக ஹீரோஹோண்டாவின் விற்பனை மாதத்திற்கு 5 லட்சம் என்ற புதிய இலக்கை கடந்து சாதனை படைத்து வருகிறது. தவிர, அந்த நிறுவனம் ஆண்டுக்கு 50 லட்சம் மோட்டார்சைக்கிள்களுக்கு மேல் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோவும் ஆண்டுக்கு 50 லட்சம் மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யும் எண்ணத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது. இதற்காக, மாத விற்பனையை 5 லட்சமாக உயர்த்துவதற்கு அந்த நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தற்போது அந்த நிறுவனம் மாத்திற்கு சராசரியாக 3.7 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது. வரும் அக்டோபர் மாதத்தில் இந்த விற்பனையை 4.2 லட்சமாக அதிகரிக்கவும் இலக்கு வைத்துள்ளது.

இதற்காக, பல்சர், கேடிஎம் டியூக் உள்ளிட்ட பைக்குகளுக்கு தனி ஷோரூம்களை திறந்து வருகிறது. மேலும், பாக்சர் பைக்கின் 150 சிசி திறன் கொண்ட புதிய மாடலையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும, தனது ஆலைகளின் உற்பத்தி திறனையும் அந்த நிறுவனம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதேபோன்று, வெளிநாட்டு சந்தையிலும் விற்பனை மற்றும் உற்பத்தியை பெருக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும், புதிய சலுகை திட்டங்களையும் அறிவிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, July 9, 2011, 11:49 [IST]
English summary
Bajaj Auto has come a long way from being scooter maker into being a force in the premium motorcycle segment. But the company is yet to catch up with the market leader Hero Honda which clocks 5 million units regularly per month. Now it has been reported it targeting monthly numbers of 4.20 lakh bikes and three-wheelers by October, which translates into five million units annually. The report states that at present, the company averages 3.7 lakh units a month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+