கேடிஎம் டியூக் பைக்கை விரைவில் களமிறக்க பஜாஜ் திட்டம்

பெரும் எதிர்பார்ப்புடன் பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்திய நிஞ்சா 650ஆர் மார்க்கெட்டில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இருப்பினும், 150, 180, 220சிசி செக்மெண்ட்டில் பஜாஜ்தான் முன்னிலை வகிக்கிறது.
எனவே, நிஞ்சாவுக்கு வரவேற்பு இல்லாதது குறித்த அந்த நிறுவனம் அலட்டி கொள்ளவில்லை.
இந்த நிலையில், அடுத்ததாக கேடிஎம் டியூக் ஆன்/ஆப் ரோடு பைக்கை களமிறக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் 2 மாதங்களில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ துவங்க உள்ள நிலையில், இந்த பைக்கை ஏன் முன்கூட்டியே பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்கிறது என்று எழுந்த கேள்விக்கும் விடை கிடைத்துள்ளது.
வரும் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டூவீலர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்கக பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.
மேலும், புதிய குட்டிக்கார் கான்செப்டை காட்சிக்கு வைக்கவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பைக்குகளை காட்சிக்கு வைக்க விரும்பாத பஜாஜ், கேடிஎம் டியூக் 200 பைக்கை முன்கூட்டியே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மார்க்கெட் பரபரக்கின்றன.
மேலும், இந்த மாதத்திலேயே கேடிஎம் டியூக் பைக்கை பஜாஜ் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி இருப்பதாகவும் தெரிகிறது.
இதற்கு தக்கவாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேடிஎம் டியூக் பைக்கின் சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








