தமிழகத்தில் புதிய 150சிசி பாக்ஸர்: பஜாஜ் அறிமுகப்படுத்தியது

Boxer 150 cc
சென்னை: புதிய 150சிசி எஞ்சினுடன் பாரத் பைக் என்ற பெயரில் வந்துள்ள புதிய பாக்ஸர் பைக்கை பஜாஜ் ஆட்டோ நேற்று சென்னையில் அறிமுகம் செய்தது.

நகர்ப்புறங்களில் மட்டும் கோலோய்ச்சி வரும் 150 சிசி ரக பைக்குகளை, கிராமப்புற சந்தையிலும் கொண்டு செல்லும் முயற்சியை பஜாஜ் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, கிராமப்புற சந்தையில் நன்கு அறிமுகமான தனது பாக்ஸர் வரிசைகளின் பெயரில் புதிய 150சிசி பைக்கை பஜாஜ் வடிவமைத்துள்ளது.

இந்த பைக்கை சமீபத்தில் பஜாஜ் ஆர்ப்பாட்டமில்லாமல் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், தனக்கு முக்கியமான சந்தை என்று தமிழகத்தை வர்ணித்து வரும் பஜாஜ், 150சிசி பாக்ஸர் பைக்கை நேற்று தமிழக மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது.

சென்னையில் நடந்த விழாவில் பஜாஜ் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு பொது மேலாளர் சந்திரசேகர் புதிய பாக்ஸரை தமிழகத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

இரண்டு சக்கர எஸ்யூவி கார் என்று கூறும் அளவுக்கு வலிமையான பாகங்களுடன் வந்துள்ள புதிய பாக்ஸர் எஞ்சின் 12 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல்கொண்டது.

மலைப்பாங்கான சாலைகள், கரடு முரடான சாலைகள் என எந்த சாலைகளிலும் அனாயசமாக செல்லும் திறன் வாய்ந்த வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்பக்கம் அழகான ஸ்கூப், பின்பக்க கேரியர் என முழுக்க முழுக்க கிராமப்புற சந்தையில் எடுபடும் வடிவமைப்புடன் வந்துள்ளது புதிய பாக்ஸர்.

இந்த புதிய 150சிசி பாக்ஸர் பைக் சென்னையில் ரூ.43,247 எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 3, 2011, 15:06 [IST]
English summary
India's second largest Two wheeler maker, Bajaj Auto on Friday launched Boxer 150cc in Tamil Nadu. Addressing presspersons here R. Chandrasekar, General Manager, Marketing and Sales, said the new Boxer 150cc, positioned as the ‘Bharat Bike', was a part of the company's strategy of providing relevant differentiated products to meet the needs of a variety of consumers. The vehicle was designed as an ‘SUV on two wheels' to specifically meet customers' requirements. He said conventional 100-cc bikes performed adequately on smooth roads, but were not geared to handle the tough terrain outside the cities. The Boxer 150cc's engine would deliver 12 PS power and 12.26 NM torque, nearly 50 per cent more than the standard 100-cc, to make a demanding commute with any kind of load and on any kind of terrain situation far easier.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+