ஜனவரி 3ந் தேதி கேடிஎம் டியூக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டம்

KTM Duke 200
பைக் பிரியர்களுக்கு புதுமையான விருந்து படைக்க உள்ள கேடிஎம் டியூக் ஆப் ரோடு பைக் வரும் ஜனவரி 3ந் தேதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் ஆப்ரோடு பைக் தயாரிப்பில் புகழ்பெற்றது. அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவு பங்குகளை பஜாஜ் கையகப்படுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில், கேடிஎம் நிறுவனத்தின் டியூக் பிராண்டு ஆப் ரோடு பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்ய பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது. இதற்காக, டியூக் பைக்கின் சோதனை ஓட்டங்களை பஜாஜ் நடத்தி முடித்துள்ளது.

இந்த நிலையில், வரும் ஜனவரி 3ந் தேதி டியூக் 200 பைக்கை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், மஹாராஷ்டிர மாநிலம், சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் கேடிஎம் டியூக் 200 பைக்கின் உற்பத்தியும் துவங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேடிஎம் டியூக் 200 பைக் ரூ.1 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த பைக்கில் 199.5 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 25 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

மேலும், 3.3 வினாடிகளில் 60 கிமீ வேகத்தையும், 9.5 வினாடிகளில் 100 கிமீ வேகத்தையும் எட்டும் திறன் படைத்தாக இருக்கும். இது 136 கிலோ எடையை கொண்டிருக்கும்.

வித்தியாசமாகவும், கம்பீரமாகவும் இருக்கும் டியூக் பைக்கின் வடிவமைப்பு நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று கேடிஎம் கருதுகிறது.

ஆப் ரோடு செக்மென்ட்டில் டியூக் பைக் மூலம் பஜாஜ் ஆட்டோவும், இந்திய சந்தையில் கேடிஎம் நிறுவனமும் அடியெடுத்து வைக்க உள்ளதால் தற்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, December 12, 2011, 10:39 [IST]
English summary
The country's second largest two wheeler maker Bajaj Auto may launch the KTM Duke 200 offroad bike in India January 3rd,reports said. The much awaited offroader coming with 199.5 cc engine and it will generate 25 bhp power.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+