அக்டோபரில் பஜாஜ் வாகன விற்பனை அமோகம்

இதற்காக, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் புதிய மாடல்களை அந்த நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. கிராமப்புற சந்தையில் ஏற்பட்ட வெற்றிடத்தை போக்கும் விதமாக சமீபத்தில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய 150சிசி பாக்ஸருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதேபோன்று, விரைவில் புதிய பல்சரையும் அறிமுகப்படுத்த பஜாஜ் ஆயத்தமாகியுள்ளது. இதுபோன்று, பஜாஜ் எடுத்து வரும் முயற்சிகளுக்கு தற்போது பலன் கிடைக்க தொடங்கியுள்ளது.
கடந்த அக்டோபரில் இதுவரை இல்லாத அளவாக 3.51,083 டூ வீலர்களை பஜாஜ் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத விற்பனையை(329,776டூவீலர்கள்) ஒப்பிடும்போது இது 6.46 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதேபோன்று, ஏற்றுமதியும் 19.53 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால், உற்சாகமடைந்துள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பரபரப்பாகியுள்ளது.மேலும், புதிய பல்சர் மூலம் விற்பனையில் புதிய மைல்கற்களை எட்ட முடியும் என்று பஜாஜ் ஆட்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








