ரூ.14,999 முன்பணம் கட்டினால் பல்சர்: பஜாஜ் ஆஃபர்

இந்தியர்களின் மனங்கவர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்காக பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வலம் வருகிறது. 150 சிசி பிரிவில் பல்சர்தான் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் பல்சரை எளிதாக சொந்தமாக்கிக்கொள்ளும் வாய்ப்பை பல்சர் வழங்கியுள்ளது. இதன்படி, ரூ.14,999 என்ற மிகக்குறைந்த முன்பணத்தை கட்டினால் போதும்; புதிய பல்சரை வாங்கிக்கொள்ளலாம் என்ற அரிய சலுகையை பஜாஜ் ஆட்டோ வழங்குகிறது.
இத்திட்டத்தின்படி, ரூ.14,999 முன்பணத்தில் 150சிசி பல்சரையும், ரூ.15,999 முன்பணத்தில் 180சிசி பல்சரும், ரூ.17,999 முன்பணத்தில் 220சிசி பல்சரையும் வாங்கிக்கொள்ளலாம் என்று பஜாஜ் தெரிவித்துள்ளது.
இந்த சலுகையை வரும் 21ந் தேதி வரை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பஜாஜ் தெரிவித்துள்ளது. தவிர, அவெஞ்சர் டூரர் பைக்கை ரூ.16,999 முன்பணத்தில் வாங்கிச் செல்லும் வாய்ப்பையும் அந்த நிறுவனம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








