டுகாட்டி, ஹார்லி டேவிட்சன் பைக்குளில் இந்திய உதிரிபாகங்கள்

Harley Davidson Bike
டுகாட்டி, ஹார்லி டேவிட்சன் என்றவுடன் நினைவுக்கு வருவது அந்த பைக்குகளின் அசாத்தியமான தோற்றமும், அபரிமித திறன் கொண்ட எஞ்சினும்தான்.

வெளிநாட்டு பிராண்டு முத்திரையுடன் இந்திய சந்தையில் கலக்கி வரும் அந்த நிறுவனங்களின் பைக்குகளின் எஞ்சின்களில் இந்திய உதிரிபாகங்கள்தான் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

ஆம், டுகாட்டி, ஹார்லி டேவிட்சன், யமஹா உள்ளிட்ட ஏராளமான சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெங்களூரை சேர்ந்த சன்சேரா எஞ்சினியரிங் நிறுவனம்தான் பைக்குகளுக்கான எஞ்சின் உதிரிபாகங்களை சப்ளை செய்து வருகிறது.

முன்னணி பைக் நிறுவனங்கள் தயாரிக்கும் சாதாரண ரக பைக்குகளிலும், மோட்டோ ஜிபி பந்தயங்களில் பயன்படுத்தப்படும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளிலும் சன்சேரா நிறுவனத்தின் உதிரிபாகங்கள்தான் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

மேலும், உதிரிபாகங்களை தரமாக சப்ளை செய்வதற்காக சன்சேரா நிறுவனத்துக்கு டுகாட்டி நிறுவனத்தின் சிஇஓ கேப்ரியல் டெல் டோர்ஷியோ விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

இதுகுறித்து சன்சேரா எஞ்சினியரிங் நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் வாசன் கூறியதாவது:

"யமஹா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்தான் எங்களது நிறுவனத்தை டுகாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, டுகாட்டி நிறுவனத்தின் பைக்குகளுக்கு எஞ்சின் பாகங்களை சப்ளை செய்து வருகிறோம்.

மேலும், டுகாட்டி விருது மூலம் இந்தியாவால் எந்தளவுக்கு தரமான பொருட்களை வழங்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்கான வாய்ப்பாக கருதுகிறோம். மேலும், உலகின் தலைசிறந்த சப்ளையர்களுடன் கடும் போட்டியும் நிலவுகிறது," என்றார்.

இந்த நிலையில், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் சப்ளையில் இந்தியா உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் ஏற்றுமதி ஆண்டுக்கு 30 சதவீதம் என்ற அளவில் வேகமான வளர்ச்சியை எட்டி வருகிறது.

ஆட்டோமொபைல் உற்பத்தியில் புகழ்பெற்ற தாய்லாந்து மற்றும் கொரியா நாட்டுக்கு கூட இந்தியாவிலிருந்து உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 14, 2011, 13:23 [IST]
English summary
Sansera Engineering, a Bangalore based company has been building vital engine parts for super bike manufacturers such as Ducati, Harley Davidson and Yamaha since several years. This is quite an achievement considering these bikes have entered India only recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+