மும்பைவாசிகளை அசத்திய மணிக்கு 402 கிமீ வேகத்தில் பறக்கும் பைக்

பிரபல வாகனங்களுக்கான ஆயில் தயாரிப்பாளரான கல்ஃப் ஆயில் நிறுவனம் இந்தியாவில் மோட்டார்சைக்கிள் பந்தயங்களை நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தனது டிராக் ரேஸிங் மோட்டார்சைக்கிள் பந்தயத்தை பிரபலமடைய செய்யும் வகையில் உலகின் அதிவேக மோட்டார்சைக்கிளை மும்பை வரவழைத்திருந்தது.
மும்பையில் மூன்று இடங்களில் இந்த பைக்கை பிரபல பைக் ரேஸர் இயான் கிங் ஓட்டி காண்பித்து பார்வையாளர்களை அசத்தினார். இந்த பைக்கில் 1,500 ஹார்ஸ் பவர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், இது நைட்ரோ மீத்தேன் எரிபொருளில் ஓடுகிறது.
பார்முலா ஒன் கார்களைவிட இந்த பைக் அதிக வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. அதிகபட்சம் மணிக்கு 402.8 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் இதன் எஞ்சின் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பைக் 6 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








