அடுத்த ஆண்டு இரட்டை எஞ்சினுடன் வரும் ஹயோசங் ஸ்போர்ட்ஸ் பைக்

Hyosung Super Bike
அடுத்த ஆண்டு இரட்டை எஞ்சினுடன் கூடிய 250சிசி புதிய ஹயோசங் ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்த இருப்பதாக கார்வேர் தெரிவித்துள்ளது. இதுதவிர, எதிர்காலத்தில் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

புனேயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கார்வேர் மோட்டார்ஸ் நிறுவனம் கொரியாவை சேர்ந்த எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹயோசங் பிராண்டு பைக்குகளை இந்தியாவில் அசெம்பிளிங் செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், ஐதாராபாத்தில் ஹயோசங் சூப்பர் பைக்குகளுக்கான பிரத்யேக ஷோரூமை கார்வேர் மோட்டார்ஸ் திறந்துள்ளது. இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்ட கார்வேர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் எஸ்.பி.ரேகார் கூறியதாவது:

"ஐதராபாத் வாடிக்கையாளர்களுக்கு எங்களது சேவை எளிதாக கிடைக்கும் வகையில் இந்த புதிய ஷோரூமை திறந்துள்ளோம். புதிய ஷோரூமில் அனைத்து விதமான ஹயோசங் சூப்பர் பைக்குகளையும் வாங்கலாம்.

வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டு இரட்டை எஞ்சின் கொண்ட 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக் ரூ.2.25 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இது நிச்சயம் இளைஞர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கும்.

இதைத்தொடர்ந்து, எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கான சாத்தியக்கூறுகளை தற்போது ஆராய்ந்து வருகிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 6, 2011, 13:13 [IST]
English summary
Garware motors to launch twin engine 250cc Hyosung sports bike next year. The company also planning to launch electric bikes indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+