புதிய ஹயோசங் ஜிடி650என் சூப்பர் பைக் அறிமுகம்

கொரியாவை சேர்ந்த எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனம், கார்வேர் மோட்டார்ஸ் ஒத்துழைப்புடன் தனது ஹயோசங் பிராண்டு சூப்பர்பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
ஏற்கனவே ஜிடி650ஆர் சூப்பர் பைக்கையும், ஹயோசங் எஸ்டி-7 குரூஸர் பைக்கையும் கார்வேர் மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், புதிய ஹயோசங் ஜிடி650என் சூப்பர் பைக்கை கார்வேர் மோட்டார்ஸ் நேற்று அறிமுகம் செய்தது.
இந்த புதிய சூப்பர் பைக்கில் 8 வால்வுகள் கொண்ட 647 சிசி வாட்டர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 9,000ஆர்பிஎம் வேகத்தில் அதிகபட்சம் 82 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த புதிய பைக் நிச்சயம் இந்திய பைக் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று கார்வேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தியா கார்வேர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த புதிய பைக்குக்கான புக்கிங்கை கார்வேர் மோட்டார்ஸ் நேற்றே துவங்கிவிட்டது. சென்னை, பெங்களூர்,புனே, குர்கான், மும்பை, டெல்லி, ஆமதாபாத், கோல்கட்டா, கோவா, கொச்சி, கோல்ஹாப்பூர், இந்தூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள டீலர்களில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.
அவசர காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் 24 மணிநேர சேவையையும் வழங்குவதாக கார்வேர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த சூப்பர் பைக் டெல்லியில் ரூ.4.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








