இந்திய சாலைகளில் பறக்க வரும் ஹயோசங் சூப்பர் பைக்குகள்

By
Garware Superbike
சென்னை: அதிக திறன் கொண்ட ஹயோசங் சூப்பர் பைக்குகள் விற்பனையை வரும் ஏப்ரல் மாதம் துவங்க இருப்பதாக கார்வேர் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

புனே நகரை மையமாக கொண்ட கார்வேர் நிறுவனம்,கொரியாவை சேர்ந்த எஸ்&டி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இரு சக்கர வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளது.புனேயில் தொழிற்சாலை அமைத்துள்ள கார்வேர் மோட்டார்ஸ் விரைவில் இரண்டு சூப்பர் பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக கார்வேர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கார்வேர் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்(எம்.டி.) கூறியதாவது:

ஹயோசங் ஜிடி650ஆர் மற்றும் ஹயோசங் எஸ்டி7 ஆகிய இரண்டு மாடல்களில் சூப்பர்பைக்குகளை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.இந்த பைக்குகளுக்கான முன்பதிவு நாடு முழுவதும் உள்ள 10 டீலர் பாயிண்டுகளில் வரும் மார்ச் மாதம் துவங்கும்.ஏப்ரல் மாதத்திலிருந்து டெலிவிரி கொடுக்கப்படும்.

புனேயில் ரூ.20கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள அசெம்பிளிங் தொழிற்சாலையிலிருந்து நாள் ஒன்றுக்கு 10 மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கலாம்.முதலாம் ஆண்டில் 2,000 பைக்குகளை விற்பனையாகும் என்று நம்புகிறோம்.

இந்த பைக்குகள் கொரியாவிலிருந்து பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு புனேயில் உள்ள கார்வேர் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் அசெம்பிளிங் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது,"என்றார்.

ஹயோசங் ஜிடி650ஆர் மாடலுக்கு ரூ.5.5லட்சம் தோராய விலையும்,ஹயோசங் எஸ்டி7 மாடலுக்கு ரூ.6லட்சம் தோராய விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கார்வேர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஹயோசங் சூப்பர்பைக்குகளின் சிறப்பம்சங்கள்
எஸ்டி7மாடல் ஜிடி650ஆர் மாடல்
எஞ்சின் எஞ்சின்:647சிசி வி-டிவின் 678.2சிசி வி-டிவின்
எஞ்சின் திறன் 72.6hp/9000rpm 61.6 hp/8,000rpm
எஞ்சின் அதிகபட்ச திறன் 60.9nm/7250rpm 57.3nm /7,000rpm
கியர் 6 ஸ்பீடு கியர் 5 ஸ்பீடு கியர்
வீல் பேஸ் 1,435mm 1,690mm
முன்சக்கர பிரேக் 3000 double discs 3000 single disc
பின்சக்கர பிரேக் 2300 Single disc 3000 single disc
முன்சக்கர டயர் 120/60 ZR-17 55W 120/80 -16 60H
பின்சக்கர டயர் 160/60 ZR-17 69W 170/80-15 77H

More from DriveSpark

Article Published On: Thursday, February 10, 2011, 9:00 [IST]
English summary
Garware Motors is eyeing on selling 2000 units of its Hyosung super bikes during the initial year of its launch. The company’s MD said the bookings for the bike will commence during March and deliveries will be made in the next month itself. She said the company hoped to sell 2000 units in the first year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+