ஹார்லி டேவிட்சன் பைக் வாங்கிய இரண்டாவது இந்திய பெண்

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக் வாங்கிய முதல் பெண் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.இந்நிலையில், ஐதாராபாத்தை சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவரும் ஹார்லி டேவிட்சன் அயர்ன்-883 குரூஸ் பைக்கை வாங்கி இந்திய பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஆர்க்கிடெக்ட் எஞ்சினியரான கஸ்தூரி தியோதர் ஹார்லி டேவிட்சன் வாங்கிய இரண்டாவது இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," ஹார்லி பைக் ஓட்டவேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். என்னை போன்றே பல பெண்கள் ஹார்லி டேவிட்சன் பைக் வாங்குவதற்கு ஆவலாக இருக்கின்றனர்.அவர்கள் என்னை பின்தொடர்வார்கள் என்று கருதுகிறேன்," என்றார்.
ஹார்லி டேவிட்சன் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் சஞ்செய் திரிபாதி கூறுகையில்,"அமெரிக்காவில் 650சிசி மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட பைக்குகளை பெண்கள் வாங்குவது சகஜம். ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு அங்கு ஏராளமான பெண்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.அந்த டிரெண்டு இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது," என்றார்.


Click it and Unblock the Notifications








