டீலர்களுக்கு கடன் வழங்குவதற்கு எச்டிஎப்சி வங்கியுடன் டிவிஎஸ் ஒப்பந்தம்

TVS Logo
டீலர்களின் முதலீட்டை அதிகரிக்கும் வகையில் எச்டிஎப்சி வங்கியுடன் டிவிஎஸ் மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

மோட்டார்சைக்கிள் மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டிவிஎஸ் நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக, டீலர் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதலீட்டை அதிகரிக்கவும், அதிக அளவில் வாகனங்களை கொள்முதல் செய்யும் வகையில் டீலர்களுக்கு நிதியுதவி செய்வதற்காக எச்டிஎப்சி வங்கியுடன் டிவிஎஸ் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 600 டிவிஎஸ் டீலர்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் பயன்பெறுவர். வாடிக்கையாளர் சேவைக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும், விற்பனையை அதிகரிக்க கூடுதலாக வாகனங்களை கொள்முதல் செய்வதற்கும் டிவிஎஸ் டீலர்களுக்கு எச்டிஎப்சி வங்கி கடனுதவி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வட்டியிலும், ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்று வசிதயுடன் இந்த கடன் வசதி கிடைக்கும் என்பதால் டீலர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 14, 2011, 14:17 [IST]
English summary
TVS Motors and HDFC Bank entered in an agreement in order to fund TVS Motors dealers. The two firms signed a MoU which enables the dealers of TVS Motors to transfer funds online, get access to repayment facilities and account status in real time.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+