பைக்குகளில் ஹோண்டா பெயரை கழற்றிவிடும் ஹீரோ

ஹீரோ ஹோண்டா குழுமதத்திலிருந்து ஜப்பானை சேர்ந்த ஹோண்டா விலகியதையடுத்து, இந்தியாவின் ஹீரோ நிறுவனம் தனித்து சந்தையில் களமிறங்கியுள்ளது.
ஹீரோ ஹோண்டா என்ற பெயரையும் ஹீரோ மோட்டோ கார்ப் என்று மாற்றிவிட்டது. இருப்பினும், ஹீரோ ஹோண்டா பிராண்டிலேயே பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தனது பிராண்டில் தயாரிக்கப்படும் பைக்குகளில் ஹோண்டா பெயர் ஒட்டிக்கொண்டிருப்பதை ஹீரோ விரும்பவில்லை. எனவே, நடப்பு நிதி ஆண்டிலேயே தனது பைக்குகளிலிருந்து ஹோண்டா பெயரை நீக்குவதற்கு ஹீரோ முடிவு செய்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள இம்பல்ஸ் ஆப்-ரோடு பைக் மற்றும் மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் உள்பட ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து மோட்டார்சைக்கிள்களிலும் விரைவில் ஹோண்டா பெயர் இருக்காது என்றும், அவற்றில் ஹீரோ மோட்டோ கார்ப் பிராண்டு பெயர் மட்டும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








