எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்கிறது ஹீரோ எலக்ட்ரிக்

சுற்றுச்சூழல் மாசுபடுதல், எரிபொருள் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையி்ல் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தயாரித்து அறிமுகம் செய்வதில் பல்வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த வரிசையில்,பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பதில், ஹீரோ நிறுவனத்தின் ஓர் அங்கமான ஹீரோ எலக்ட்ரிக் ஈடுபட்டு வருகிறது. இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்த ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், அடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்ய உள்ளது.
இதுகுறி்த்து ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:
"ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில்,அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ற அதிக திறன் வாய்ந்த பிரத்யேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளோம். சுவிட்சர்லாந்தில் இந்த மாதம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அங்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து,உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்படும். இதுதொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள டீலர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.
இன்னும் ஓர் ஆண்டில் இ-ஸ்கூட்டர்களை அங்கு முறைப்படி அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஸ்கூட்டர் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படாது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








