யமஹா, பஜாஜ் எஞ்சினியர்களை வேலைக்கு அமர்த்திய ஹீரோ ஹோண்டா

ஹீரோ ஹோண்டா கூட்டு குழுமத்திலிருந்து ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் விலகியது. மேலும், ஹீரோ ஹோண்டாவில் வேலை பார்த்த தனது ஊழியர்களையும் ஹோண்டா திரும்ப அழைத்துக்கொண்டது.
இதனால், ஹீரோ ஹோண்டாவில் பல பணியிடங்கள் காலியாகின. இந்த நிலையில், ஹீரோ நிறுவனம் சந்தையில் தனது வணிகத்தை விரிவாக்கவும், புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப பிரிவுகளில் ஊழியர் பற்றாக்குறையால் ஏற்பட்ட சரிவை சரிகட்டவும் திட்டமிட்டது.
இதற்கு ஏதுவாக யமஹா, பஜாஜ் மற்றும் மஹிந்திரா டூவீலர் நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவமிக்க 150 எஞ்சினியர்களை அதிக சம்பளம் கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது. புதிய மாடல்களை உருவாக்குவதிலும், சோதனைகள் நடத்துவதிலும் இவர்கள் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ஹீரோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








