மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணிக்கு ஹீரோ ஹோண்டா ஸ்பான்சர்

நான்காவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் கோலாகலமாக துவங்க உள்ளன. இந்த முறை புதிய வீரர்கள் மற்றும் புதிய ஸ்பான்சர்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுடன் ஐபிஎல் அணிகள் களமிறங்க உள்ளன.
இந்த போட்டியில் விளையாடும் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் புதிய ஸ்பான்சர் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஸ்பான்சர் அளிக்கிறது.
இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் செய்திதொடர்பாளர் கூறியதாவது:
"உலகம் முழுவதும் பிரபலமான ஹீரோ ஹோண்டா நிறுவனம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஸ்பான்சர் செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பங்குதாரராக ஹீரோ ஹோண்டா வந்துள்ளதை மனதார வரவேற்கிறோம்.
அடுத்த மாதம் துவங்க உள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், ஹீரோ ஹோண்டா சின்னம் கொண்ட சீருடைகளை அணிந்து விளையாடுவார்கள். இது ஹீரோ ஹோண்டாவுக்கு மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெருமை சேர்க்கும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








