மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடம் புதிய சிபிசி எக்ஸ்ட்ரீம்-ஹீரோ ஹோண்டா அறிமுகம்

150 சிசி ரகத்தை சேர்ந்த ஹீரோ ஹோண்டாவின் சிபிசி பைக், மார்க்கெட்டில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து வருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், அவ்வப்போது சிபிசி பைக்கை மேம்படுத்தி வருகிறது ஹீரோ ஹோண்டா.
இந்நிலையில், பல புதிய மாறுதல்களுடன் புதிய சிபிசி எக்ஸ்ட்ரீம் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ஹீரோ ஹோண்டா. பழைய மாடலில் பொருத்தப்பட்டிருந்த அதே 149.2 சிசி எஞ்சின்தான் புதிய எக்ஸ்ட்ரீமிலும் பொருத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், பைக்கின் வெளிப்புற வடிவமைப்பு பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், சாவி துவாரம் மழைக்காலங்களில் பாதிக்கப்படாமலிருக்க இக்னிஷன் ஷட்டர், எஞ்சின் கார்டு மற்றும் 5 ஜோடி ஸ்போக்ஸ் கொண்ட அலாய் வீல், பன்முக பிரதிலிப்பு கொண்ட டேஞ்சர் விளக்கு உள்ளிட்டவை எக்ஸ்ட்ரீமின் பொலிவை கூட்டியுள்ளது.
மேலும், பெட்ரோல் டேங்க் வடிவமும் மாற்றம் கண்டுள்ளது. புதிய பெட்ரோல் டேங்க் ஸ்போர்ட்டி லுக்கை தருகிறது. பின் சக்கரத்திலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளதால், கூடுதல் பாதுகாப்பை தரும். சைலென்சரில் பாதுகாப்பு ஷீல்டு கவரும், நவீன தொழில்நுட்பம் கூடிய ஷாக் அப்சார்பருடன் வந்துள்ளது நியூ எக்ஸ்ட்ரீம்.
ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் உள்ளதுபோன்று ஸ்டெப் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளதால், பைக்குக்கு எடுப்பான தோற்றத்தை கூடுதலாக்குகிறது. டெல்லியில் ரூ.72,247 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பைக் பாந்தர் பிளாக், மேக்ஸ் பிரவுன்,ஃபிளேமிங் ஆரஞ்ச்,டிஜிட்டல் சில்வர்,ஸ்போர்ட்ஸ் ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் என ஹீரோ ஹோண்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








