ஒரே நிதியாண்டில் 5 மில்லியன் மோட்டார்சைக்கிள் விற்பனை:ஹீரோ ஹோண்டா சாதனை

Hero Honda
டெல்லி: கடந்த ஒரே நிதியாண்டில் 50 லட்சம் மோட்டார் சைக்கிள்களுக்கு மேல் விற்பனை செய்து, ஹீரோ ஹோண்டா புதிய சாதனை படைத்துள்ளது.

உலகின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ ஹோண்டா விற்பனையில் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன், ஒரே மாதத்தில் 5 லட்சம் மோட்டார்சைக்கிள்களுக்கு மேல் விற்பனை செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், விற்பனையில் அடுத்து ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது ஹீரோ ஹோண்டா. கடந்த ஒரே நிதியாண்டில் 50 லட்சம் மோட்டார்சைக்கிள்களுக்கு மேல் விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ஹீரோ ஹோண்டா தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால் கூறியதாவது:

"கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் முதலிடத்தை தக்க வைத்து வருகிறோம். மேலும், கடந்த நிதியாண்டில் 50 லட்சம் மோட்டார்சைக்கிள் விற்பனை என்ற புதிய இலக்கை கடந்துள்ளோம். இது, எங்களுக்கு ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கியுள்ளது.

கடந்த நிதியாண்டில் 54,02,444 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளோம். இது அதற்கு முந்தைய நிதியாண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது, 17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2009-10 ம் ஆண்டில் 46,00,130 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று, மார்ச் மாதம் 5,15,852 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு புதிய எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளோம். இது கடந்த ஆண்டு மார்ச் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, 24 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது," என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 6, 2011, 9:20 [IST]
English summary
Hero Honda Motors Ltd , the world’s largest twowheeler manufacturer for 10 consecutive years, today reported 5-million-plus sales in a fiscal year for the first time, underlining the robust momentum that the company has sustained throughout the year 2010-11. The company sold 54,02,444 units of two-wheelers during the year, translating into a growth of more than 17% over the corresponding period when Hero Honda had sold 46,00,130 units.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+