ஹீரோ ஹோண்டாவின் புதிய கிளாமர்- சிறப்பு பார்வை

Hero Honda Glamour
ஹோண்டாவிடமிருந்து முறைப்படி விடைபெற்றவுடன் முதல் வேலையாக அனைத்து பைக்குகளின் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களை செய்து அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகிறது ஹீரோ ஹோண்டா.

சிபிசி எக்ஸ்ட்ரீம், ஹங்க் பைக்குகளை தொடர்ந்து கிளாமரை கூட்டும் விதத்தில் கிளாமர் பைக்கின் வடிவமைப்பில் சிற்சில மாற்றங்களை செய்து சந்தையில் இறக்கியுள்ளது ஹீரோ ஹோண்டா.

125 செக்மென்டில் தனி மதிப்பும், மரியாதையையும் ஹீரோ ஹோண்டாவுக்கு கிளாமர் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதை மனதில் கொண்டு, மிகமிக கவனமாக கிளாமரின் வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளது ஹீரோ ஹோண்டா.

புதிய கிளாமரில் டிஜிட்டல் டிஸ்பிளே கொண்ட ப்யூல் கேஜ் பொருத்தப்பட்டுள்ளதால் அடுத்த தலைமுறையில் கிளாமர் நுழைந்துவிட்டதை எளிதாக உணர முடிகிறது. பெட்ரோல் டேங்க் சைஸ் சற்று பெரிதாக்கி வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முகப்பு விளக்கு அமைந்துள்ள ஸ்கூப்பின் வடிவமைப்பும் மாறியுள்ளது. முகப்பு விளக்கின் மேல் புதிய வைசர் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. சைலென்சர் ஹீட் ஷீல்டு வடிவமைப்பிலும் கைவைத்துள்ளது ஹீரோ ஹோண்டா. இவை முன்பைவிட கிளாமரின் அழகை மேம்படுத்துகிறது.

ஸ்டிக்கர் டிசைன்களும் மாற்றம் கண்டுள்ளது. தற்போது 5 விதமான கலர்களில் கிளாமரை களமிறக்கியுள்ளது ஹீரோ ஹோண்டா. எஞ்சினில் மட்டும் கைவைக்காமல் வெளிப்புற வடிவமைப்பில் மட்டும் மாற்றங்களை செய்து தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது ஹீரோ ஹோண்டா.

கையாளுமையிலும் புதிய கிளாமர் சிறப்பாக இருக்கிறது. நகர்ப்புறங்கள், கிராமப்புறங்கள் என அனைத்து சாலை நிலைகளிலும் ஓட்டும்போது கிளாமர் கையாளுமையில் பாஸ் மார்க் பெற்றுவிடுகிறது.

மைலேஜிலும் ஹீரோ ஹோண்டாவின் பெயரை கிளாமர் காப்பாற்றுகிறது. லிட்டருக்கு 50 கி.மீ. குறையாமல் மைலேஜ் தருகிறது.

வாடிக்கையாளர்கள் பார்த்தவுடன் கேட்கும் அளவுக்கு வடிவமைப்பில் சூட்சுமங்கள் செய்துள்ள ஹீரோ ஹோண்டா, விலையிலும் திருப்தியை தரும் அளவுக்கு நிர்ணயித்துள்ளது. டிஸ்க் பிரேக் கொண்ட கிளாமர் ரூ.61,255(தோராய விலை) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 25, 2011, 12:48 [IST]
English summary
Hero Honda has revealed the 125 cc Glamour model with minor modifications in its looks department to attract the new customers who are conscious of their bike’s looks. However, the engine block powering the machine remains same.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+