ரூ.66,800 விலையில் விற்பனைக்கு வரும் ஹீரோ இம்பல்ஸ்

Hero Impulse
தனது சொந்த பிராண்டில் வரும் 150சிசி இம்பல்ஸ் பைக்கை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக் டெல்லியில் ரூ.66,800 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ ஹோண்டாவிலிருந்து ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் பிரிந்தததையடுத்து, ஹீரோ நிறுவனம் தனது சொந்த பிராண்டில் பைக்குகளை விற்பனைக்கு கொணடு வர முடிவு செய்தது.

மேலும், ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் பெயரை ஹீரோ மோட்டோ கார்ப் என்றும் மாற்றியது.

லண்டனில் நடந்த ஹீரோ மோட்டோ கார்ப் பிராண்டு அறிமுக நிகழ்ச்சியிலேயே தனது சொந்த பிராண்டில் வெளியிடப்போகும் 150சிசி இம்பல்ஸ் பைக்கையும், 110 சிசி மேஸ்ட்ரோ ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், தனது சொந்த பிராண்டில் முதலில் இம்பல்ஸ் பைக்கை ஹீரோ நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

இந்த பைக் ஆன் ரோடு என்று கூறப்படும் சாதாரண சாலைகளிலும், ஆப் ரோடு என்று கூறப்படும் சாகசப் பயணங்களுக்கான சாலைகளிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் அணில் துவா கூறியதாவது:

"எங்களது சொந்த பிராண்டில் வரும் முதல் பைக் என்பதால் கூடுதல் சிறப்புகளுடன் அதே நேரத்தில் தகுந்த விலையுடன் விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.

150சிசி ரகத்தை சேர்ந்த இந்த பைக் சாதாரண ஸ்போர்ட்ஸ் பைக்கை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

தற்போது நடந்து வரும் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளின் வழியாக இந்த பைக்கை பிரபலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

ஆலையிலிருந்து டீலர்களுக்கு இந்த பைக்குகளை அனுப்பும் பணிகள் துவங்கிவிட்டன. இந்த பைக் விரைவில் மாநகரங்களில் உள்ள ஷோரூம்களில் கிடைக்கும்," என்றார்.

150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் இம்பல்ஸ் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் இம்பல்ஸ் ரூ.66,800 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக ஹீரோ தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 18, 2011, 10:56 [IST]
English summary
Hero MotoCorp to start selling of its first 'Hero' branded bike Hero Impulse soon. This Bike can be used for both normal commuting as well as off-road adventure. Hero Impulse produces a maximum power of 13.2 Ps at the rate of 7,500 rpm with a torque of 13.40 Nm at the rate of 5,000 rpm.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+