ஹீரோ இம்பல்ஸ் ஆன்/ஆப் ரோடு பைக்-சிறப்பு பார்வை

Hero Impulse
மாற்றங்கள் ஒன்றே வாழ்க்கையின் அடுத்த அத்தியாயங்களை எட்டுவதற்கு உதவும் என்ற தத்துவார்த்தத்தை மனதில் கொண்டு ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது பிராண்டில் அறிமுகம் செய்துள்ள முதல் பைக்தான் இம்பல்ஸ்.

மேலும், ஆப் ரோடு பைக்குகளை பொதுவாக சாதாரண சாலைகளிலும், சாதாரண பைக்குகளை சாகசங்களுக்கு ஏற்ற ஆப் ரோடுகளிலும் ஓட்ட முடியாது என்ற நிலையை தகர்க்கும் வகையில் இரண்டு சாலை நிலைகளிலும் செல்லும் வகையில் டூ-இன் பைக்காக வந்துள்ளது இம்பல்ஸ்.

ஆன் ரோடு/ ஆப் ரோடு பைக்காக வந்துள்ள இம்பல்சின் முக்கியமான சிறப்பம்சங்களை காணலாம்.

எஞ்சின்:

இம்பல்சில் 149.2 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 7,500 ஆர்பிஎம் வேகத்தில் 13.02 பிஎச்பி ஆற்றலை வெளிக்கொணர்கிறது. அதிகபட்ச டார்க்கில் வீலிங் செய்ய ஏற்றதாக இருக்கிறது. மேலும், இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

வடிவமைப்பு:

ஸ்ட்ரீட் பைக், ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் மாடல்களிலிருந்து இம்பல்ஸ் முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்புடன் வந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புற சாலைகளோ அல்லது சவால் மிகுந்த எந்த சாலைகளிலும் எளிதாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆப்ரோடுக்கு ஏற்ற வகையில் இதன் சைலென்சர் இருக்கையை ஒட்டிச்சென்று பின் இருக்கையுடன் சேர்ந்தே முடிகிறது. இது இம்பல்சின் அழகுக்கு அழகு சேர்க்கிறது.மேலும், சைலென்சர் முடிவில் ரிங் போன்று இருக்கும் குரோம் பூச்சு இம்பல்ஸ் அழகை கூட்டுகிறது.

இதன் முன்பக்க மட்கார்டை பார்த்தால்தான் ஆப் ரோடு பைக் என்பதை முழுமையாக நம்ப முடிகிறது. ஹெட்லைட் ஸ்கூப்பும் கவரும் வகையில் இருக்கிறது.

சஸ்பென்ஷன்:

முன்பக்கத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க்ஸ் ஷாக் அப்சார்பரும், பின்பக்கத்தில் கேஸ் சார்ஜ்டு மோனோஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டிருப்பதால் மற்ற பைக்குகளை ஒப்பிடும்போது ரைடிங்கில் கூடுதல் சுகத்தை அளிக்கிறது.

டயர்கள்:

இம்பல்ஸ் பைக்கின் முன்பக்கம் 19 இஞ்ச் டயரும், பின்பக்கம் 17 இஞ்ச் டயரும் பொருத்தப்பட்டிருப்பதால் சாகச சாலைகளில் அனாயசமாகவும், அதிக ரோடு கிரிப்புடனும் செல்கிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்:

இந்த பைக் 245மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருந்தாலும், பைக்கில் உட்காரும்போது அதிக உயரம் கொண்ட பைக்காக தெரியவில்லை.

பிரேக்குகள்:

முன்பக்கத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 110 மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டிருக்கிறது.

வசதி மற்றும் கையாளுமை:

ஆன்ரோடில் செல்லும்போது 2 பேர் தாரளமாக அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைககள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.மேலும், பைக்குகளில் லாக் கொண்ட இருக்கைகள் சில சமயங்களில் சிறிது நகர்வுகள் இருக்கும் என்பதால் பைக் ஓட்டும்போது சவுகரியமாக இருக்காது.

ஆனால், இம்பல்ஸ் இருக்கைகள் சரியான விதத்தில் பொருத்தப்பட்டிருப்பதால் பைக்கை ஓட்டும்போது பிரச்னை இருக்காது. ஆன் ரோடில் மிதவேகத்தில் செல்லும்போது பிரமாதம் என்று சொல்லத் தோன்றுகிறது.

பிற அம்சங்கள்:

பின்பக்கத்தில் டேஞ்சர் மற்றும் இன்டிகேட்டர்களில் கிளியர் லென்ஸ் கொண்டதுடன் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதால் பின்னால் வருபவர்களுக்கு விளக்குகள் பளிச்சென்று தெரிகிறது.

இதில் அனலாக் டாக்கோமீட்டரும், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில், ட்ரிப் மீட்டர், எரிபொருள் எச்சரிக்கை மானி ஆகியவையும் இருக்கின்றன. மேலும், இதில் 11.1 கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை கொண்டிருக்கிறது.

விலை:

மார்க்கெட்டிற்கு விரைவில் விற்பனைக்கு வரும் இம்பல்ஸ் டெல்லியில் ரூ.66,800 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 29, 2011, 16:10 [IST]
English summary
Hero moto corp has launched Impulse on and off road bike Impulse recently. The brand new bike will change the trend in sports bike market. Here are given some features and specifications of Impulse.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+