வரலாற்றில் இல்லாத அளவு லாபத்தை ஈட்டியது ஹீரோ

கடந்த நிதி ஆண்டின் ஜூலை-செப்டம்பர் இடையிலான 2வது காலாண்டில் ஹீரோ நிறுவனம் ரூ.506 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. ஆனால், நடப்பு நிதி ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஹீரோ நிறுவனம் ரூ.604 கோடியை நிகர லாபமாக ஈட்டி சாதனை படைத்துள்ளது.
கடந்த நிதி ஆண்டை ஒப்பிடுகையில் 19 சதவீதம்(ரூ.99 கோடி) கூடுதலாகும். மேலும், இந்த காலக்கடத்தில் ஹீரோ நிறுவனம் ரூ.5,909 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது கடந்த நிதி ஆண்டு 2 வது காலாண்டில் ரூ.4,630 கோடியாக இருந்தது.
இந்த சாதனை குறித்து ஹீரோ தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால் குறிப்பிடுகையில்," நடப்பு நிதி ஆண்டின் 2 வது காலாண்டில் எதிர்பார்த்ததைவிட கூடுதல் லாபத்தை ஈட்டியுள்ளோம். விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் 2வது காலாண்டில் ஹீரோ நிறுவனம் 15.44 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் 6 மில்லியன் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய அந்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








