தீபாவளியின்போது முதல் ஆன்/ஆப் ரோடு பைக்கை களமிறக்க ஹீரோ திட்டம்

Hero Impulse
தீபாவளி பண்டிகையின்போது தனது 150சிசி இம்பல்ஸ் பைக்கை அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோ கார்ப் திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா பிரிவுக்கு பின்னர் ஹீரோ மோட்டோ கார்ப் தனது சொந்த பிராண்டில் அறிமுகம் செய்யும் பைக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் நடந்த ஹீரோ மோட்டோ கார்ப் புதிய பிராண்டு அறிமுக விழாவில் இம்பல்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த பைக்கை ஹீரோ மோட்டோ கார்ப் வெளியுலகுக்கு காட்டியது.

இந்த நிலையில், வரும் தீபாவளி பண்டிகையையொட்டி, இம்பல்ஸை வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

என்எக்ஸ்ஆர் என்ற பெயரில் ஹோண்டா விற்பனை செய்து வரும் பைக்கின் மறுபிறப்பாக இம்பல்ஸ் வந்துள்ளது.

பிரேசிலில் ஹோண்டா என்எக்ஸ்ஆர் வெற்றிகரமான மாடலாக வலம் வருகிறது.

ஆனால், இம்பல்ஸ் பைக்கில் சில மாற்றங்களை செய்து ஹீரோ அறிமுகம் செய்கிறது.

இம்பல்ஸில் பொருத்தப்பட்டிருக்கும் 150 சிசி எஞ்சின் 13.8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

மேலும், 120 கிலோ மட்டுமே எடை கொண்டதாக இருக்கும்.

இந்த புதிய பைக்கை ரூ.75,000 எக்ஸ்ஷோரூம் விலையில் ஹீரோ மோட்டோ கார்ப் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 12, 2011, 13:49 [IST]
English summary
Hero moto corp is planning to launch the Impuse 150cc bike during the Deepavali festival. The much awaited on/off road bike equipped with 150cc engine and it will output 13.8bhp power. It will come at Rs.75,000 Exshowroom price range.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+