பார்முலா ஒன் கார் பந்தயம்: நரேன் கார்த்திகேயனுக்கு ஹீரோ மோட்டோ கார்ப் ஸ்பான்சர்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஏர்டெல் இண்டியன் கிராண்ட் பிரிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பார்முலா ஒன் கார் பந்தயம் அடுத்த மாதம் 30ந் தேதி டெல்லி அருகே நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் துவங்க இருக்கிறது.
இந்த போட்டியில் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட இந்தியாவின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற நரேன் கார்த்திகேயனும் பங்கேற்கிறார். அவருக்கு இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஸ்பான்சர் செய்வதாக அறிவித்துள்ளது.
ஹிஸ்பானியா ரேஸிங் டீம்(எச்ஆர்டி)சார்பில் பங்கேற்கும் நரேன் கார்த்திகேயன் போட்டியில் பயன்படுத்தும் ரேஸ் காரில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் சின்னம்(லோகோ) இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








