பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு கியர்பாக்ஸ் தயாரிக்கும் ஹீரோ

Hero Group
டெல்லி: பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு, கியர் பாக்ஸ் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் ஹீரோ நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், சொகுசு தயாரிப்பு தவிர அதிக திறன் கொண்ட சூப்பர் பைக்குகள் தயாரிப்பிலும் புகழ்பெற்றது. உலகின் பல்வேறு நாடுகளில் பிஎம்டபிள்யூ நிறுவனம் டீலர்களை நியமித்து பைக் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு தேவையான கியர்பாக்ஸ் தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தை ஹீரோ நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 முதல் 8 ஆண்டுகளுக்கு கியர்பாக்ஸ் தயாரித்து வழங்கும் வகையில் இரு நிறுவனங்களுக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஹீரோ ஹோண்டா குழுமத்திலிருந்து ஹோண்டா பிரிந்த நிலையில், ஹீரோ குழுமத்துக்கு கிடைத்துள்ள இந்த ஆர்டன் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹீரோ ஹோண்டாவிலிருந்த ஹோண்டாவின் 26 சதவீத பங்குகளை வாங்கியதால், ஹீரோவுக்கு சிறிது நிதிநெருக்கடிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிஎம்டபிள்யூவின் பல்க் ஆர்டர் ஹீரோவுக்கு பூஸ்ட் அளிக்கும் ஆட்டோமொபைல் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த தகவலை ஹீரோ நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 3, 2011, 9:28 [IST]
English summary
Indian Hero Motors post the break up of their JV with Honda have finally got off to a good start by grabbing the contract to make gearboxes for BMW bikes which will be sold world-wide. The contract will be for five or eight years depending on the transmissions sourced for different products by BMW Motorrad. But yet confirmed by Hero motors.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+