ஹோண்டாவுக்கு ரூ.2,450 கோடி ராயல்டி தரும் ஹீரோ

Hero Honda
டெல்லி: வரும் 2014ம் ஆண்டு வரை தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் ஹோண்டாவுக்கு, ஹீரோ நிறுவனம் ரூ.2,450 கோடி ராயல்டி தர வேண்டியுள்ளது.

ஹீரோ ஹோண்டா கூட்டு குழுமத்திலிருந்து ஜ்பபானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் கடந்த மாதம் முறைப்படி விலகியது. ஹீரோ ஹோண்டா கூட்டு குழுமத்தில் இருந்த ஹோண்டாவின் 26 சதவீத பங்குகளை முஞ்சால் குழுமத்தின் ஹீரோ நிறுவனமே வாங்கியது.

இருப்பினும், ஹீரோவுக்கு வரும் 2014ம் ஆண்டு வரை தொழில்நுட்ப உதவிகளை வழங்கப்போவதாக ஹோண்டா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, இரு நிறுவனங்கள் இடையே அண்மையில் ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஹீரோ ஹோண்டாவின் மொத்த விற்பனையில் ஹோண்டாவுக்கு வழங்கப்பட்டு வரும் 2.7 முதல் 2.8 சதவீத காப்பு தொகையை (ராயல்டி) தொடர்ந்து வழங்குவதாக ஹீரோ ஒப்புக்கொண்டுள்ளது.

இதனால், வரும் 2014ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஹோண்டாவுக்கு ராயல்டியாக ரூ.2,450 கோடி வரை ஹீரோ தர வேண்டியுள்ளது. இந்நிலையில், தனது சொந்த தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் இருசக்கர வாகனங்களை தயாரிப்பதற்கான முயற்சிகளை ஹீரோ தீவிரப்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 1, 2011, 13:30 [IST]
English summary
Hero Honda will pay Honda Rs 2,450 crore till 2014 as part of a new licencing agreement signed between the Hero Group and Honda. Hero Honda has been paying royalty to Honda at around 2.7% to 2.8% of net sales and it will remain the same even in future.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+