இந்தியாவை கேந்திரமாக கொண்டு பைக் ஏற்றுமதி துவங்க ஹோண்டா திட்டம்

ஹீரோ ஹோண்டா கூட்டணியிலிருந்து விலகிய ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவிலான வர்த்தக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் பைக் தயாரிப்பாளராக மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே, இரண்டு இடங்களில் ஆலை அமைத்து இரு சக்கர வாகனங்களை தயாரித்து வரும் அந்த நிறுவனம் தற்போது பெங்களூர் அருகில் புதிய ஆலையை கட்டி வருகிறது.
இதன்மூலம், தனது உற்பத்தி திறனை வெகுவாக உயர்த்திக்கொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக திட்டங்களை வகுத்துள்ள அந்த நிறுவனம் தற்போது பைக் ஏற்றுமதியையும் துவங்க இருக்கிறது.
டோக்கியோவில் நடந்து வரும் ஆட்டோ கண்காட்சியில் ஹோண்டா உயர் அதிகாரி தட்சுசுரிமோ ஒயாமா கூறுகையில்,"இந்தியாவில் ஏற்றுமதியை கவனிக்கும் வகையில் மைய அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம்.
இதன்பின், நேபாளம் மற்றும் வங்கதேசத்திற்கு மாஸ் செக்மென்ட் பைக்குகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும், உற்பத்தி திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்றார்.
நேபாளம்,வங்கதேசத்தை தொடர்ந்து தென் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து பைக்குகளை ஏற்றுமதி செய்யவும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








