காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் புதிய டேஸ்லர்: ஹோண்டா அறிமுகம்

ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என்ற இரண்டு புதிய டேஸ்லர் வேரியண்ட்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
இதில் ஸ்டான்டர்டு வேரியண்ட் நேற்று முதல் ஷோரூம்களில் விற்பனைக்கு வந்துவிட்டது. டீலக்ஸ் வேரியண்ட் இந்த மாத இறுதியில் ஷோரூம்களுக்கு வருகிறது.
இந்த புதிய வேரியண்ட் டேஸ்லரில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அதே எஞ்சின்களுடன்தான் வந்துள்ளது.
இதில் டீலக்ஸ் வேரியண்ட் டியூவல் டோன் கலர்களில் கிடைக்கும். ஸ்டான்டர்டு வேரியண்ட் சிங்கிள் டோன் கலர்களில் கிடைக்கிறது. மேலும், கிராபிக்ஸ் டிசைனர் கொண்ட ஸ்டிக்கருடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஆர்மர் கோல்டு மெட்டாலிக், பியர்ல் நைட்ஸ்டார் பிளாக் மற்றும் பியர்ல் சியனா ரெட் ஆகிய கலர்களில் ஸ்டான்டர்டு வேரியண்ட் கிடைக்கிறது.
ஸ்மூத்தான எஞ்சின், ரைடிங் குவாலிட்டி ஆகியவற்றால் நன் மதிப்பை பெற்றுள்ள யூனிகார்ன் டேஸ்லர் புதிய மாற்றங்களுடன் வந்துள்ளதால் வாடிக்கையாளர்களிடத்தில் அதிக வரவேற்பை பெறும் என்று ஹோண்டா நம்புகிறது.
மேலும், ஸ்போர்ட்ஸ் பைக் ரகத்தில் அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்குகளில் டேஸ்லரும் ஒன்றாக இருக்கிறது. இந்த புதிய டேஸ்லர் ஸ்டான்டர்டு வேரியண்ட் ரூ.65198 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீலக்ஸ் வேரியண்ட் ரூ.66,198 விலையிலும் ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








