சிபிஆர்250ஆர் பைக்குகளை திரும்ப பெறும் ஹோண்டா

கடந்த மார்ச் மாதம் சிபிஆர் 250ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஸ்டைல் தோற்றம், மிகச் சரியான விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சிபிஆர்250ஆர் விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், சிபிஆர்250ஆர் பைக்கில் சில பாகங்களில் பிரச்னை இருப்பது குறித்து ஹோண்டாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, முதல் லாட் சிபிஆர்250ஆர் பைக்குகளை திரும்ப பெற ஹோண்டா முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை ஹோண்டா தொடர்பு கொண்டுள்ளதாகவும், அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற டீலர் பாயிண்டுகளில் பிரச்னையை சரிசெய்து கொள்ளலாம் என்றும் ஹோண்டா தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரியர் வியூ மிரர்கள், கிராப் ரெயில்ஸ் மற்றும் எஞ்சின் கவுல்களில் பிரச்னை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வீஸ் சென்டர்களில் பிரச்னையை இருக்கும் பாகங்களை இலவசமாக மாற்றித்தரப்படும் என்று ஹோண்டா தெரிவி்த்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








