புதிய 100சிசி பைக்கை களமிறக்க ஹோண்டா திட்டம்

Honda Motorcycles Logo
டெல்லி: கிராமப்புற மார்க்கெட்டை குறிவைத்து புதிய 100சிசி பைக்கை களமிறக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது.

ஹீரோஹோண்டாவிலிருந்து வெளியேறிய ஹோண்டா, இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

நகர்ப்புற சந்தையில் ஓரளவு மார்க்கெட்டை பிடித்திருந்தாலும், கிராமப்புற மார்க்கெட்டில் ஹோண்டாவால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சாதிக்க முடியவில்லை.

எனவே, விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை ஹோண்டா தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக, ஜப்பானிய மார்க்கெட்டிங் நிபுணர்கள் தலைமையில் 5 குழுக்களை அமைத்து புதிய மார்க்கெட்டிங் யுக்திகளை அந்த நிறுவனம் வகுத்துள்ளது.

விற்பனையில் முக்கிய இடத்தை பிடிக்க கிராமப்புற மார்க்கெட்டை பிடிப்பது மிக முக்கியம் என்று உணர்ந்துகொண்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்திடம் கிராமப்புற மார்க்கெட்டை பிடிக்கும் வகையிலான 100சிசி பைக் இல்லை. எனவே, விரைவில் புதிய 100சிசி பைக்கை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

கிராமப்புற மார்க்கெட்டில் முக்கிய பங்களிப்பை அளித்து வரும் ஹீரோ ஹோண்டா சிடி டீலக்ஸ், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி, பஜாஜ் பிளாட்டினா ஆகிய 100 சிசி செக்மென்ட் பைக்குகளின் மார்க்கெட்டை உடைக்கும் வகையில் புதிய பைக்கை ஹோண்டா களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், விற்பனையில் நிச்சயம் உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும் என்றும் ஹோண்டா கருதுகிறது. ஹீரோ ஹோண்டா சிடி-100 டீலக்ஸ் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹோண்டாவின் 100சிசி பைக் வெளிவருகிறது.

சிடி-100 பெயரை ஹீரோ நிறுவனம் வரும் 2014ம் ஆண்டு வரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், ஹோண்டா நிறுவனம் இந்த பெயருக்கு சர்வதேச அளவில் பயன்படுத்தும் உரிமை பெற்றுள்ளதால், சிடி-100 என்ற பெயரிலேயே புதிய பைக்கை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 18, 2011, 12:12 [IST]
English summary
Honda, the Japanese two wheeler manufacturer and the world's largest motorcycle manufacturer is aiming to boost its market share in India by launching new 100cc motorcycle. This strategy is clearly focused at increasing Honda's sales in the rural market where 100cc motorcycles sell the most. After Honda walked out of its joint venture with Hero Honda, the Japanese firm did not have a motorcycle that sold well in the rural market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+