20 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்க ஹோண்டா இலக்கு

சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இருசக்கர வாகன சந்தையில் 14 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு 16 லட்சம் மோட்டார்சைக்கிள்களை அந்த நிறுவனம் விற்பனை செய்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான புதிய விற்பனை இலக்கை ஹோண்டா அறிவித்துள்ளது. இதன்படி, உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதியை சேர்த்து 21 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்க அந்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இதில், உள்நாட்டு சந்தையில் மட்டும் 19 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் விற்க திட்டமிட்டுள்ளது. விற்பனையை அதிகரிக்கும் வகையில், இரண்டு புதிய பைக் மாடல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய ஹோண்டாதிட்டமிட்டுள்ளது.
இதில், ஒன்று 100சிசி ரகத்தை சேர்ந்ததாக இருக்கும். மேலும், விற்பனைக்கு தக்கவாறு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
தற்போது ஆணடுக்கு 28 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ள அந்த நிறுவனம்,இதை ஆண்டுக்கு 40 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, கர்நாடாகவில் புதிய மோட்டார்சைக்கிள் ஆலையை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








