ஹயோசங் ஜிடி 650 ஸ்போர்ட்ஸ் பைக் விலை ரூ.60,000 வரை குறைப்பு

Hyosung GT650N
ஹயோசங் 650சிசி ஸ்போர்ட்ஸ் பைக் விலை முன்பைவிட ரூ.60,000 வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனல் பறக்கிறது. 180 சிசி,220 சிசி திறன் கொண்ட பைக்குகளை தொடர்ந்து 650சிசி பைக்குகளுக்கான வரவேற்பு படிப்படியாக கூடி வருகிறது.

தற்போது 500சிசிக்கும் மேற்பட்ட பைக் மார்க்கெட்டில் ஹயோசங் ஜிடி 650என் மற்றும் கவாஸாகி நிஞ்சா 650ஆர் பைக்குகள் முன்னணி மாடல்களாக இருக்கின்றன.

இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்து வரும் நிஞ்சா பைக்குகள் மார்க்கெட்டில் ஏற்கனவே பிரபலமாக உள்ளன. ஆனால், ஹயோசங் ஜிடி650என் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்களிடம் அறிமுகமாகி வருகிறது.

இந்த நிலையில், நிஞ்சா 650சிசி ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில், கார்வேர் மோட்டார்ஸ் நிறுவனம் ஹயோசங் ஜிடி 650என் ஸ்போர்ட்ஸ் பைக் விலையை ரூ.60,000 வரை அதிரடியாக குறைத்துள்ளது.

தற்போது ஹயோசங் ஜிடி 650என் ஸ்போர்ட்ஸ் பைக் ரூ.4.40 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை தன்பக்கம் கவரும் விதமாக தற்போது அந்த பைக்கின் விலை ரூ.3.80 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நிஞ்சாவுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது. டெல்லியில் கவாஸாகி நிஞ்சா 650ஆர் ஸ்போர்ட்ஸ் பைக் ரூ.4.57 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 29, 2011, 10:32 [IST]
English summary
Hyosung the Korean super bike manufacturer recently launched super bike the hyosung GT650N now available at the discounted price of Rs.3.8 lakhs (Ex-showroom). The GT650N is a sportier bike and is expected to take on the Kawasaki Ninja 650R.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+