புதிய ஹயோசங் பிரிமியம் சூப்பர் பைக் நாளை அறிமுகம்

கொரியாவை சேர்ந்த கார்வேர் நிறுவனம், இந்தியாவில் எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் ஜிடிஆர்650ஆர் மற்றும் எஸ்டி7 குரூஸர் பைக் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால், புதிய சூப்பர் பைக்கை நாளை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜிடிஆர்650என் என்ற பெயரில் வரும் இந்த பைக் பிரிமியம் சூப்பர் பைக் ரகத்தை சேர்ந்தது.
இந்த வி-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் 82 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் அலாதியான திறன் கொண்டது. இது குறைந்த எடை கொண்ட பைக் என்பதால் பெர்ஃபார்மென்சிலும் பின்னுகிறது.
புதிய சூப்பர் பைக்கை உதிரிபாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிளிங் செய்து விற்பனை செய்ய கார்வேர் திட்டமிட்டுள்ளது.
முன்பக்கம் டியூவல் டிஸ்க் பிரேக், சிங்கிள் ரியர் டிஸ்க் பிரேக், 6 ஸ்பீடு வெட் கிளட்ச் கியர் பாக்ஸ், 17 இஞ்ச் அலாய் வீல் ஆகிய சிறப்புகளுடன் இந்த புதிய சூப்பர் பைக் அறிமுகமாகிறது.


Click it and Unblock the Notifications








