விஸ்வரூபம் எடுத்த ஸ்கூட்டர் மார்க்கெட்

மேலும், ஸ்கூட்டர் மார்க்கெட்டின் அசுர வளர்ச்சியை கண்டு இருசக்கர வாகன நிறுவனங்கள் ஸ்கூட்டர் மார்க்கெட் மீது தங்களது கவனத்தை திசை திருப்பியுள்ளன.
கடந்த 1990ம் ஆண்டுகளின் வாக்கில் புதிய பைக்குகளின் வரவால் ஸ்கூட்டர் மார்க்கெட் களை இழந்தது. இதனால், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கொடி கட்டி பறந்த பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்கூட்டர் உற்பத்தியை அடியோடு நிறுத்தின.
இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆக்டிவா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. மேலும், விற்பனையிலும் நன்கு வளர்ச்சியை எட்டியது.
இதையடுத்து, சுஸுகி நிறுவனமும் ஆக்ஸெஸ் 125 பவர் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, உள்நாட்டு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும் விகோ என்ற பவர் ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து பவர் ஸ்கூட்டர் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மாதம்கூட ஸ்கூட்டர் விற்பனை 39 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால், யமஹா, பியாஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில், மார்க்கெட்டில் ஸ்கூட்டர்களுக்கு இருக்கும் தேவையை நிறைவு செய்ய முடியாமல் தவிப்பதாக இருசக்கர வாகன நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் அதுல் குப்தா கூறியதாவது:


Click it and Unblock the Notifications








